இயக்குநர் செல்வராகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் விரைவில் புதிய படம் இயக்கவுள்ளதாகவும் இப்படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் செல்வராகவன். இவர் புதுப்பேட்டை, காதல் கொண்டேன், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சூர்யா நடிப்பில் என்.ஜி.கே இவர் இயக்கிய கடைசிப் படமாகும்.
இவர் அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு புதிய படம் இயக்கவுள்ளார். இந்நிலையில் இவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய லதா என்பவர் விரைவில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரையில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.