இன்றைய இளம் இயக்குனர்களில் முக்கியமான திரைப்படங்களை மிக் இளம்வயதிலேயே இயக்கி முன்னணி இயக்குனர்களாலேயே பாரட்டப்படுபவர் செல்வராகவன். அது மட்டுமில்லாமல் தன்னுடைய தம்பியை ஒரு முன்னணி ஹீரோவாகவும் உருவாக்கியுள்ளார். இவருக்கு நடிகை சோனியா அகர்வாலுடன் திருமணம் நடந்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அதையடுத்து தன்னுடைய உதவியாளராக கீதாஞ்சலியை செல்வராகவன் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஏற்கனவே லீலாவதி மற்றும் ஓம்கர் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இப்போது கீதாஞ்சலில் மீண்டும் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் கீதாஞ்சலி தனது கணவரோடு கடந்த 4 ஆண்டுகளாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.