இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
இந்நிலையில், இன்று நானே வருவேன் படம் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளார் கலைப்புலி எஸ்.தாணு சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நானே வருவேன் பட ஷீட்டிங் தொடங்கும் எனத் தெரிவித்திருந்தார்.