எஸ்பிபி உடல்நிலை குறித்து எஸ்பிபி சரண் வெளியிட்ட வீடியோ!

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (21:30 IST)
எஸ்பிபி உடல்நிலை குறித்து எஸ்பிபி சரண் வெளியிட்ட வீடியோ!
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமே பிரார்த்தனை செய்து வருகிறது 
 
இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்டேட் செய்து வரும் அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
இந்த வீடியோவில் நேற்று என் அப்பா எப்படி இருந்தாரோ அதேபோல் இன்றும் உள்ளார். செயற்கை சுவாசம் எடுக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவுகிராது. ஆனால் அதில் உண்மை இல்லை. அவர் தற்போதும் தொடர்ந்து செயற்கை சுவாசத்தில் தான் இருந்து வருகிறார்
 
மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உங்களுடைய வேண்டுதல்கள் அவருடைய உடல்நிலை முன்னேற்றத்திற்கு உறுதியாக உதவுகின்றன என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே தயவு செய்து அவருக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்’ இவ்வாறு எஸ்பிபி சரண் அவர்கள் கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்