தெலுங்கில் ரீமேக் ஆகும் 96 படம்

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (13:37 IST)
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி இருந்த 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். 

 
விண்ணைத்தாண்டி வருவாயா படம் தமிழில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது ... பிறகு அதே படத்தில் தெலுங்கு ரீமேக்கில் சிம்பு வேடத்தில் நடிகர் நாகா சைதன்யா மற்றும் திரிஷா வேடத்தில்  சமந்தா நடித்து தெலுங்கு ரசிகர்களிடம் மெகா ஹிட் ஆனது. 
 
அதே போல் தற்போது விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிற 96 படமும் தெலுங்கி ரீமேக் ஆக உள்ளதாம். இந்த படத்தின் தெலுங்கு உரிமையை தில் ராஜ் வாங்கியுள்ளார். 
 
இந்நிலையில் தெலுங்கிலும் திரிஷாவே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சமந்தா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்