இரண்டு ஓடிடியில் 83 படம்… பிப்ரவரி மாதத்தில் பிரிமீயர்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (10:01 IST)
83 படம் இந்தியாவில் இரண்டு ஓடிடிகளில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக உலக கோப்பையை கடந்த 1983-ஆம் ஆண்டு வென்ற நிலையில் இந்த நிகழ்வை மையமாக வைத்து படம் ஒன்று உருவாகி உள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த திரைப்படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா நடித்துள்ளார். நேற்று வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று ஓடி வருகிறது.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வசூல் செய்யவில்லை என சொல்லப்படுகிறது. முதல் நாள் வசூல் சுமார் 13 கோடி ரூபாய் அளவுக்குதான் இருக்கும். இந்நிலையில் இந்த படத்தின் திரையரங்க வருமானம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் சுமார் 60 கோடி ரூபாய் அளவுக்குதான் தயாரிப்பாளர்களுக்கான பங்கு கிடைத்துள்ளதாம். அதே போல வெளிநாடுகளில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாம். திரையரங்கின் மூலமாக 130 கோடி ரூபாய் வசுலித்தால்தான் தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்ற நிலையில்  50 கோடி ரூபாய் அளவுக்கு தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பிப்ரவரி 18 ஆம் தேதி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. நெட்பிளிக்ஸ் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய இரு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்