‘விவேகம்’ படத்தில் 7 பாடல்கள்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (13:37 IST)
அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தில், மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.




‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘விவேகம்’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர்வைவா’ பாடலின் ஆடியோ, நேற்று வெளியானது. ராப் சிங்கரான யோகி பி, இந்தப் பாடலைப் பாடியுள்ளார். இந்நிலையில், எல்லா பாடல்களும் அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

பொதுவாக, கடந்த சில வருடங்களாக அஜித் படத்துக்கு இசை வெளியீட்டு விழாவோ, பத்திரிகையாளர் சந்திப்போ நடைபெறுவதில்லை. தற்போதும் அப்படியே இசை வெளியீட்டு விழா இல்லாமல், அடுத்த மாதம் நேரடியாக ஆடியோ சிடியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.
அடுத்த கட்டுரையில்