உடல் எடையைக் குறைக்க அனுஷ்கா என்ன செய்யப் போகிறார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (13:24 IST)
அதிகமாகிவிட்ட உடல் எடையைக் குறைப்பதற்காக, யோகா பயிற்சியை தீவிரமாக மேற்கொள்ளப் போகிறாராம் அனுஷ்கா.





‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக, அழகாக இருந்த இடுப்பை, பிரியாணி செய்யும் அடுப்பு போல அகலமாக மாற்றினார் அனுஷ்கா. பிரியாணி அண்டாவை இறக்கி வருடக் கணக்கில் ஆனாலும், அடுப்பு அப்படியேத்தான் இருக்கிறது. எல்லோருமே அவருடைய உடல் எடையைக் கிண்டலடித்து வருகின்றனர்.

எனவே, எப்படியாவது எடையைக் குறைத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தில் இருக்கிறார். இதனால், புதுப்பட வாய்ப்புகள் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது நடித்துவரும் ‘பாக்மதி’ படப்பிடிப்பு, இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. அது முடிந்ததும், தீவிர யோகா பயிற்சியில் ஈடுபடப் போகிறார் யோகா டீச்சரான அனுஷ்கா.
அடுத்த கட்டுரையில்