தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியை நடத்தும்போது இது பெரிய விஷயமா? - நடிகர் பார்த்திபன்

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (11:51 IST)
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் '6 அத்தியாயம்' இசை வெளியீட்டு விழாவில், தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்துகிறார்கள் என்று பேசியுள்ளார்.

 
6 அத்தியாயம்' படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ்எஸ்.ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
இவ்விழாவில் பேசிய இயக்குநர் பார்த்திபன், 2.O ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். அங்கு நான் போகாமல்  இங்கே வந்திருக்கிறேன். இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை. 6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய  வேலை இல்லை. இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்த கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயங்கள்  அப்படியான் ஒரு படமாக இருக்கும் என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்