2.ஓ படத்தை முந்திய காலா; ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (11:40 IST)
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் '2.O'. அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 
இந்நிலையில் ஜனவரி மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டிய 2.ஓ படம், கிராஃபிக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையாததால் வரும் ஏப்ரலில் வெளியாவதாக  கூறப்பட்டது. படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படியும் திட்டமிட்டபடி வேலைகள் முடியவில்லை. எனவே ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
 
இதற்கிடையே பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தை ஏப்ரல் 14 அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.' காலா' பட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடையும் கட்டத்தில் உள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்