சிட்டி vsஃபிப்த் போர்ஸ்;2.0 டிரைலர் -உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (13:01 IST)
2.0 படத்தின்  ட்ரைலர் வெளியீடு சற்று முன்னர் சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில்  பிரமாண்டமாக வெளியானது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 
 

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் இம்மாதம் இறுதியில் ரிலீசாக உள்ளது. 2015 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்ட 2.0 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 2017 ஆம் ஆண்டில் தொடக்கத்திலேயே முடிக்கப்பட்டது. அதனால் அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட 2.0 படம் கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் கிட்டதட்ட ஓராண்டு தாமதமாக ரிலீஸாக உள்ளது.. தற்போதைய நொலவரப்படி படத்தின் பட்ஜெட் மொத்தமாக 600 கோடி எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் உருவான அதிக பட்ஜெட் படம், கிட்டத்தட்ட 3000 காட்சிகளுக்கு மேல் கிராபிக்ஸ் பணிகள் , நேரடியாக 3டியில் படம்பிடிக்கப்படது என எண்ணற்ற பெருமைகளோடு உருவாகியுள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் நவம்பர் 29-ந்தேதி அன்று பல மொழிகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே டிசர் மற்றும் பாடல்கள் வெளியான ஆச்சர்யப்பட வைத்துள்ள நிலையில் தற்போது டிரைலர் 2டி மற்றும் 3டி வடிவில் வெளியாகி உள்ளது.
 

நம்மால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் நம்மை ஆள நினைக்கும் போது அதை எவ்வாறு கட்டுப்படுத்தும் பயணம் தான் 2.0. பறவைகள் பிரியரான அக்‌ஷய் குமார் செல்போன் டவர்களால் பறவைகள் இறப்பதைக் கண்டு விரக்தியடைந்து பிப்த் போர்ஸாக மாறி உலகில் உள்ள அனைவரின் செல்போன்களையும் பறித்து டெக்னாலஜியை அழிக்க முயல அதை தடுக்க செயலிழக்கப்பட்ட சிட்டியின் உதவியை நாடுகிறார் விஞ்ஞானி ரஜினி. அப்டேட் செய்ய்ப்பட்ட 2.0 வுக்கும் ஃபிப்த் போர்ஸுக்கும் நடைபெறும் போரே 2.0 என டிரையலரைக் காணும்போது தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்