செல்பி விவகாரத்தில் சிவக்குமார் செல்போனை தட்டிவிட்டது சரிதான் என நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
சமீபத்தில் செல்பி எடுக்க முயன்ற வாலிபரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனங்கள் கிளம்பவே, சிவக்குமார் அந்த வாலிபருக்கு 21,000 மதிப்பில் புதிய செல்போன் வாங்கிக் கொடுத்தார்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், நாடு முழுவதும் இளைஞர்கள் செல்பி மோகத்தில் சீரழிந்து வருகின்றனர். நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு பிரபலத்துடன் செல்பி எடுக்கிறேன் என கூறிக்கொண்டு பிரபலங்களை தொந்தரவு செய்வது தவறு.
நானெல்லாம் பலமுறை செல்பி எடுப்பவர்களின் செல்போனை வாங்கி தூக்கிப்போட்டு உடைத்திருக்கிறேன். ஒரு பொது இடத்தில் இவ்வாறு இளைஞர்கள் செய்வது தவறான விஷயம்.
ஆகவே செல்பி விவகாரத்தில் சிவக்குமார் செய்தது மிகச்சரியானது தான் என்று கூறிவேன் என மன்சூர் அலிகான் பேசினார்.