ரூ.91,000 சுவாஹா... மொபைல் சர்வீஸால் வந்த வினை

சனி, 3 நவம்பர் 2018 (11:10 IST)
டெல்லியில் உள்ள யூசுப் கரீம் என்பவர் தனது ஸ்மார்ட்போன் சரியாக செயல்படாத்தால் அதனை சர்வீஸ் செண்டரில் சரி செய்வதற்காக கொடுத்துள்ளார். ஆனால், அதன் விளைவாக 91,000 ரூபாயை இழந்துள்ளார். 
 
ஆம், ஸ்மார்ட்போனை சர்வீஸ் செய்ய கொடுத்த போது அதில் எந்த ஒரு ஆப்பின் பாஸ்வோர்ட் மற்றும் மற்ற டேட்டாக்களை அழிக்காமல் கொடுத்துள்ளார். இதனை பயன்படுத்தி அவரின் பேடிஎம் வாலட்டில் இருந்த ரூ.91,000 அவரிடம் இருந்து திருடப்பட்டுள்ளது. 
 
சர்வீஸ் முடிந்து மொபைல் அவரின் கைக்கு வந்த பிறகுதான் இந்த விஷயம் அவருக்கு தெரியவந்துள்ளது. இடது பர்றி தெரிந்ததும் அவர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். ஏழு முறை பரிவர்த்தனைகள் செய்ப்பட்டு ரூ.80,498 திருட பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
 
சர்வீஸ் செண்டரில்தான் இந்த திருட்டு நடந்திருக்கும் எனவும், நான் பல முறை கோரிக்கை வைத்தும் பேடிஎம் தனது அக்கவுண்ட்டை பிளாக் செய்யவில்லை என்றும் கரீம் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பேடிஎம் என்ன விளக்கம் அளிக்கும் என தெரியவில்லை.
 
இனிமேல், மொபைல் போனை சர்வீஸ்க்கு கொடுக்கும் போது அதில் உள்ள செயலிகளை லாக் அவுட் அல்லது அன் இன்ஸ்டால் செய்து கொடுக்க வேண்டும் என பயனர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்