பிரபல தயாரிப்பாளரின் 100 வது படம்.... கால்ஷீட் கொடுத்த விஜய்!..

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (23:35 IST)
விஜய்66 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை வம்சி இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தை அடுத்து விஜய்67 படத்தின் முக்கிய அப்டெட் வெளியாகியுள்ளது. இப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், இப்படத்தின் பாடல்களும், ஹீரோயினும் இல்லை எனவும், இப்படத்திற்கு சாம் சிஎஸ். இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர்.பி.சவுத்ரி, சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியதாகவும் , தன் நிறுவனத்திலன் 100 வது படத்தை  நடிக்க விஜய்யிடம் கால்ஷீட் கேட்டுள்ளதாகவும், இதற்கு விஜய் ஓகே சொல்லியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ஜூவாவின் அப்பா ஆர்.பி.சவுத்ரி ஆவார். இந்த நிறுவனத்தில் 50 வது படமான ஆசை ஆசையாய் என்ற படத்தில் ஜீவா ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்