பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கால் கப் பால் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். மூன்று கப் பாலை அரை கப்பாகும் அளவிற்கு நன்கு சுண்ட காய்ச்சவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை ஊற்றி, அதோடு கால் கப் பாலில் சோள மாவு கரைத்து ஊற்றி அடுப்பில் வைத்து கிளறவும். அதனுடன் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொண்டே இருக்கவேண்டும். இதில் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும். கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கி, முந்திரி சேர்க்கவும். சுவையான பீட்ரூட் அல்வா தயார்.