செய்முறை:
மிளகுடன் சீரகம், பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். 2 அன்னாசி துண்டுகளை விழுதாக அரைத்து எடுக்கவும். மீதமுள்ள 2 அன்னாசி துண்டுகளைப் பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் மிளகு விழுதுடன் அன்னாசி விழுது, மஞ்சள்தூள், ரசப்பொடி, உப்பு, பாதியளவு தக்காளி, தண்ணீர், வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மீதமுள்ள தக்காளி, அன்னாசித் துண்டுகள் சேர்த்து வதக்கவும். இதைக் கொதிக்கும் ரசத்தில் சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.