வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சோம்பு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து தக்காளியை நன்றாக வதங்கிய பின் கரைத்த புளியை ஊற்றவேண்டும். இப்பொழுது அதில் உப்பு, தேவைப்பட்டால் தேங்காய் பாலை சேர்த்து கொள்ளலாம். பின்னர் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவேண்டும். மீனை சேர்த்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.