கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை லேசாக வதக்கவும், வெங்காயம் நன்கு வதங்கியதும் வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் சிக்கனை சேர்த்து கிளறவும். பின்னர் சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும். உப்பு சரி பார்த்து கொள்ளவும். கடைசியில் கொத்தமல்லி இலையை போட்டு இறக்கவும்.