"தலைவி" இந்திய சினிமாவில் முக்கியமான படமாக அமையும் - ஜீ வி பிரகாஷ்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (21:18 IST)
தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர்  வெளியீடு, இன்று  படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.  
 
இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் ...
 
தலைவி  இந்திய சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். மிகப்பெரும் ஆளுமைகள் இப்படத்தில்  பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் இசை ஒரு காலகட்டத்தை சொல்வதாக இருக்கும். அந்த காலகட்டத்தை இசையில் கொண்டுவர முயற்சித்துள்ளேன். ஜெயலலிதா அம்மாவிற்கு ஒரு தனி இசை தொகுப்பை உருவாக்கியிருக்கிறேன். உங்கள் அனைவரும் பிடிக்கும் என நம்புகிறேன்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்