பஞ்சாபின் மோசமான பேட்டிங், வெறித்தனமான பவுலிங்! – கோட்டை விட்ட வார்னர்!

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (10:13 IST)
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் அணிக்கும், சன் ரைஸர்ஸ் அணிக்கும் நடந்த மோதலில் வெற்றியை தவறவிட்டது சன் ரைஸர்ஸ் அணி.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள சன் ரைஸர்ஸ் அணிக்கும், 6வது இடத்தில் இருந்த கிங்ஸ் லெவன் அணிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் அணி ப்ளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்புகள் இருப்பதால் இரு அணிகளுமே தீவிரமான போராட்டத்தை மேற்கொண்டன.

ஆரம்பமே பேட்டிங் இறங்கிய கிங்ஸ் லெவன் அணியை பவுலிங்கால் ரன் ரேட்டை குறைக்க முயன்றது சன் ரைஸர்ஸ். அதுபோலவே அணியில் மயங்க் அகர்வால் இல்லாததால் கே.எல்.ராகுல் – மந்தீப் களமிறங்க 5வது ஓவரில் மந்தீப் அவுட் ஆனார். அணியின் நம்பிக்கை நாயகனான கெயிலும் 20 ரன்னில் அவுட் ஆக, தொடர்ந்து வந்தவர்களும் சுமாரான ஆட்டத்தைய அளிக்க கிங்ஸ் லெவனின் ஸ்கோர் 126 ஆக முடிந்தது.

இது சன் ரைஸர்ஸுக்கு எட்டி விடக்கூடிய இலக்குதான் என்பதால் சன் ரைஸர்ஸ் அணியே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக பந்து வீச்சில் இறங்கிய கிங்ஸ் லெவன் மாஸ் காட்ட தொடங்கியது. பவர் ப்ளே வரை 50 ரன்கள் வரை குவித்து வெற்றி நோக்கி முன்னேறி கொண்டிருந்த சன் ரைஸர்ஸ் திடீரென தடுமாற தொடங்கியது. 6வது ஓவர் முதலாக ஓவருக்கு ஒரு விக்கெட் என தொடர்ந்து இழந்த சன் ரைஸர்ஸ் கடைசி 26 பந்துகளுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களிலேயே ஆட்டமிழந்தது.

இது கிங்ஸ் லெவன் அணிக்கு மிகப்பெரும் வெற்றியாக அமைந்துள்ளதால் கே.எல்.ராகுல் ரசிகர்கள் இதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்