உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி.. காலியாக இருக்கும் மைதானங்கள்.. இங்கிலாந்தின் இலக்கு இதுதான்..!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (17:38 IST)
cricket
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில் இன்று போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் பார்வையாளர்கள் அதிக அளவில் இல்லாமல் வெறும் ம்ைதானமாக காட்சி அளிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
கிரிக்கெட் போட்டி எந்த நகரத்தில் நடந்தாலும் எந்த அணிகளுக்கு இடையே நடந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை ரசிகர்கள் கூடி விடுவார்கள். ஆனால் உலக கோப்பை ஆக இருந்தும் அதுவும் முதல் போட்டியாக இருந்தும் மைதானம் காலியாக இருப்பதை பார்த்து வர்ணனையாளர்களை ஆச்சரியமடைந்துள்ளனர். 
 
இன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில்  இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் பெரும் அளவில் ஆர்வம் காட்டவில்லை. எனவே மைதானம் முக்கால்வாசிக்கு மேல் காலியாக உள்ளது என்பதும் ஒரு சில பார்வையாளர்களெநெ மைதானத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில்  9 விக்கெட் இழப்பிற்கு 282  ரன்கள் எடுத்துள்ளது, 289 ரன்கள் இலக்காக நியூசிலாந்து அணிக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்