மகளிர் ஐபிஎல்.. ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் சிங் மிகப்பெரிய தொகைக்கு ஏலம்..!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:17 IST)
2023 ஆம் ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது என்பதும் இந்த ஐபிஎல் போட்டிக்காக ஐந்து அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வீராங்கனைகளின் ஏலம் இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக ஏலம் நடைபெற்று வருகிறது. 
 
இந்தியாவின் முன்னணி நட்சத்திர வீராங்கனையாக ஸ்மிருதி வந்தனாவை பெங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளது. அவர் ரூ.3.5 கோடிக்கு ஏலம் போய் உள்ளார்
 
அதேபோல் மற்றொரு சிறப்பான வீராங்கனையான ஹர்மன்ப்ரீத் ரூ.1.8 கோடிக்கு ஏலம் போய் உள்ளார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்து உள்ளது. தொடர்ந்து ஏலம் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் எந்தெந்த வீராங்கனைகள் எவ்வளவு விலைக்கு ஏலம் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்