அதானி குழுமத்தின் அனைத்து சொத்துகளையும் ஏலம் விட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (15:55 IST)
அதானி குழுமத்தின் அனைத்து சொத்துக்களையும் மத்திய அரசு கைப்பற்றி ஏலம் விட வேண்டும் என சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சுப்பிரமணியன் சுவாமி, ‘அதானி குழுமத்தின் அனைத்து சொத்துக்களையும் பிரதமர் நரேந்திர மோடி தேசிய மயமாக வேண்டும் என்றும் அதன் பின் அந்த சொத்துக்களை ஏலம் விட்டு அந்த பணத்தில் அதானி குழுமத்திடம் பணத்தை இழந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அ
 
அதானியுடன் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இல்லை என்பது போல் சிலர் பேசுகின்றனர் என்றும் ஆனால் அதானியுடன் பல காங்கிரஸ் கட்சியினர் தொடர்பில் இருப்பது எனக்கு தெரியும் என்றும் நான் காங்கிரஸ் பற்றி கவலைப்படவில்லை என்றும் பாஜகவின் நேர்மை நிலை நாட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்