லோக்கல் கிரிக்கெட் விளையாட்டு ஒன்றில் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஃபீல்டிங் செய்த விதம் குறித்த வீடியோவை சச்சின் தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட் இளைஞர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான விளையாட்டு. விடுமுறை காலம் வந்தாலே நிதி வசூலித்து ஆங்காங்கே லோக்கல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது வழக்கம். இப்படியான கிரிக்கெட் போட்டிகளில் சில சமயம் ஐசிசியின் விதிமுறைகளையெல்லாம் மிஞ்சிய பல புதிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதும் உண்டு.
அவ்வாறு லோக்கல் கிரிக்கெட் ஒன்றில் பிடித்த கேட்ச் ஒன்றை சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் பந்துவீசுபவர் ஒரு வேகபந்தை வீச பேட்ஸ்மேன் லாவகமாக அதை இடது ஆஃபில் தட்டி சிக்ஸருக்கு தள்ளுகிறார்.
பவுண்டரி லைனில் வந்த பந்தை அங்கிருந்த ஃபீல்டர் பிடித்து மேலே வீசிவிட்டு லைனை தாண்டி குதிக்கிறார். ஆனால் பந்து பவுண்டரி லைனை தாண்டி வந்தது. அதை கேட்ச் பிடித்தால் அவுட் செல்லுபடியாகாது என்பதால் சூதானமாக செயல்பட்ட ஃபீல்டர் கால்பந்து போட்டிகளில் செய்வது போல கிரிக்கெட் பந்துக்கு பைசைக்கிள் கிக் ஒன்றை கொடுத்து கிரவுண்டுக்குள் தள்ளுகிறார். அதை அங்கிருந்த வீரர் ஒருவர் கேட்ச் பிடித்து அவுட் ஆக்குகிறார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர் “கால்பந்தும் விளையாட தெரிந்த நபரை கிரிக்கெட் மேட்ச் அழைத்து வந்தீர்கள் என்றால் இப்படிதான் நடக்கும்” என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். மேலும் சில விளையாட்டு வீரர்களும் இந்த ட்வீட்டை பகிர்ந்துள்ளனர்.
Edit by Prasanth.K
This is what happens when you bring a guy who also knows how to play football!! ⚽️