வர்ணபகவான் கருணையால் வெற்றி வாகை சூடுகிறதா சன்ரைசஸ்

Webdunia
புதன், 17 மே 2017 (23:37 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது பிளே ஆஃப் போட்டி இன்று பெங்களூரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே 129 ரன்கள் என்ற இலக்கை கொல்கத்தா மிக எளிதில் எட்டிபிடித்துவிடும் என்றே நினைக்கப்பட்டது.



 


ஆனால் கொல்கத்தாவின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டது மழை. இந்த நிமிடம் வரை மழை நிற்காததால் போட்டியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு 11.52க்குள் மீண்டும் ஆட்டம் தொடங்கினால் கொல்கத்தா மீதமுள்ள இருபது ஓவரையும் விளையாடும். ஆனால் 12.58க்கு ஆட்டம் தொடங்கினால் ஐந்து ஓவர்களுக்கு உண்டான இலக்கு கொடுக்கப்படும். ஒருவேளை 1.20க்கு ஆட்டம் தொடங்கினால் இரண்டு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் விளையாட வாய்ப்பு தரப்படும்.

ஆனால் இன்று முழுவதும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் புள்ளிகள் அதிகம் உள்ள காரணத்தால் சன் ரைசஸ் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். சன் ரைசஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வருண பகவான் கருணை செய்வார? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த கட்டுரையில்