இங்கிலாந்து வீரர்களை ஐபிஎல் போட்டிக்கு அனுப்ப மாட்டோம்: கிரிக்கெட் வாரியம் தகவல்

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (07:38 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வரும் நிலையில் இங்கிலாந்து வீரர்களை ஐபிஎல் போட்டிக்கு அனுப்ப மாட்டோம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது 
 
ஐபிஎல் தொடரில் ஏற்கனவே 50 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 51 ஆவது போட்டியில் இருந்து இறுதிப்போட்டி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர் முடிவடைந்த பின்னர் இங்கிலாந்து வீரர்களுக்கு அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதால் ஐபிஎல் போட்டிக்கு இங்கிலாந்து வீரர்களை அனுப்ப முடியாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது
 
இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த உடன் இங்கிலாந்து அணி வங்கதேசம் செல்ல உள்ளது. அதன் பின்னர் பாகிஸ்தான் சென்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன் பின்னர் உலக கோப்பை டி20 போட்டிக்கு தயாராக வேண்டிய நிலை உள்ளது. எனவே ஐபிஎல் போட்டிக்காக இங்கிலாந்து வீரர்களை அனுப்ப முடியாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் அணிகளில்  இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், பேர்ஸ்டோ, ஜாசன் ராய் உள்பட 14 இங்கிலாந்து வீரர்கள் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்