அரசியல் பலிகடாவாக கிரிக்கெட் மாறக்கூடாது – வாசிம் அக்ரம் கருத்து!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (17:47 IST)
இருநாட்டு அரசியல் காரணமாக கிரிக்கெட் பலிகாடாவாகி விடக் கூடாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று உலகில் நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக வளர்ந்துள்ளது. ஆனால் அதில் பாகிஸ்தான் நாட்டு வீரர்களை சேர்த்துக் கொள்வதில்லை. இதற்கு இரு நாட்டு அரசுகளின் அரசியலேக் காரணம். அதுபோல இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே இருதரப்பு போட்டிகளும் நடத்தப்படுவதில்லை.

இந்நிலையில் லங்கா பிரிமீயர் லீக்கில் கலந்துகொள்ளும், கல்லே கிளாடியேட்டர் அணியின் பயிற்சியாளாக வாசிம் அக்ரம் நியமிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ‘அரசியல் காரணமாக கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விளையாட்டும் பலியாகி விடக் கூடாது. இரு நாட்டில் நடக்கும் டி 20 தொடர்களிலும் இரு நாட்டு வீரர்களும் கலந்துகொள்ள வேண்டும். ஐபிஎல் வந்த பின்னர்தான் பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தை 20 கோடி ரசிகர்கள் பார்த்து ரசித்தது என்பது மிகப்பெரிய விஷயம், உலகில் எந்த போட்டியையும் இந்த அளவுக்கு ரசிகர்கள் பார்த்தது இல்லை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்