ஏலத்தில் கோட்டை விட்டுவிட்டது சி எஸ் கே அணி… விமர்சித்த சுரேஷ் ரெய்னா!

vinoth

திங்கள், 21 ஏப்ரல் 2025 (13:38 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதனால் இந்த சீசனில் அந்த அணி ப்ளே ஆஃப் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக அந்தணியின் முன்னாள் வீரர்களே விமர்சிக்க ஆரம்பித்துள்ளன.

சென்னை அணியின் தளபதியாக விளங்கிய சுரேஷ் ரெய்னா வர்ணனையின் போது பேசும்போது “சி எஸ் கே பயிற்சியாளரும் அணி நிர்வாகமும் ஏலத்தில் சரியாக செயல்படவில்லை என நான் நினைக்கிறேன். பல திறமையான இளம் வீரர்கள் ஏலத்தில் இருந்தனர். ரிஷப் பண்ட், கே எல் ராகுல் போன்ற மூத்த வீரர்களையும் அவர்கள் எடுக்கவில்லை.  மற்ற அணிகள் மிகவும் நேர்மறையாக விளையாடுகிறார்கள்.  ஆனால் அது சி எஸ் கே அணியில் சுத்தமாக இல்லை.  இப்படி திணறும் சி எஸ் கே அணியை நான் என்றுமே பார்த்ததில்லை” எனக் கூறியுள்ளார்.

முன்பாக மற்றொரு முன்னாள் வீரர் அம்பாத்தி ராயுடு “சிஎஸ்கே அணி பவர்ப்ளே மற்றும் மிடில் ஓவர்களில் ரன்களை சேர்க்க அதிரடியாக ஆடுவதில்லை. நல்ல பந்துகள் வருமென்று காத்திருக்கிறார்கள். அந்த முறை இனிமேல் வேலைக்காகாது. முன்பெல்லாம் சி எஸ் கே பேட்டிங்கைப் பார்த்துப் பயப்படுவார்கள். அப்போது பேட்ஸ்மேன்கள் நேர்மறையான அனுகுமுறையோடு ஆடினார்கள். இந்த சீசனில் சி எஸ் கே அணி மீண்டு வரும் என எனக்குத் தோன்றவில்லை” என விமர்சித்திருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்