எனக்கு வாய்ப்பளிக்காதது வெறுப்பை உண்டாக்கியது – அஜிங்க்யே ரஹானே ஓபன் டாக்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (17:27 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரஹானேவுக்கு வாய்ப்பளிக்காததால் வெறுப்படைந்ததாக கூறியுள்ளார்.

நேற்று நடந்த டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அஜிங்க்யே ரஹானே அரைசதம் அடித்தார். இந்த தொடரில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அப்படியே வழங்கினாலும் அவர் இடத்தில் இறக்காமல் ஓபனிங் இறக்கப்பட்டார். இதனால் அவரால் சிறப்பாக பங்களிக்க முடியவில்லை.

நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்த நிலையில் ஷிகர் தவானோடு இணைந்து அளித்த பேட்டியில் ‘எனக்கு வாய்ப்புக் கிடைக்காததால் நான் வெறுப்படைந்தேன். ஆனால் இப்போது அணிக்கு பங்காற்றியதில் மகிழ்ச்சியாகிறேன். அதுவும் உன்னோடு (தவானோடு ) இணைந்து விளையாடியது கூடுதல் மகிழ்ச்சி.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்