இந்தியாவுக்கு புறப்படும் முன் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கிய விராட் கோஹ்லி!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (18:41 IST)
ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணியின் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி முடித்து விட்டது என்பதும் ஒரு நாள் தொடரை இழந்தாலும் டி20 தொடரை வென்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா மிக மோசமான படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை என்பதும் அவர் நாடு திரும்ப உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அடுத்து அவருக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்பதால் குழந்தை பிறக்கும் போது மனைவியின் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் நாடு திரும்புகிறார் 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என ஒரு சில ஆலோசனைகளை இந்தியா புறப்பட முன்னர் வீரர்களுக்கு விராட் கோஹ்லி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த ஆலோசனையின்படி இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்