இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ்ஸை விட படுதீவிரமாக பரவும் தன்மை கொண்டது என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் விமானங்களை தரையிறக்க பல நாடுகள் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பாலு அவர்கள் கூறிய நிலையில் பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தான் அதிகரித்துள்ளது என்றும், உருமாற்றம் காரணமாக நோயுடைய தீவிரத்தன்மையோ அல்லது இறப்பு விகிதமோ அதிகரிக்கவில்லை என்றும் நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர் வி.கே. பால் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த விளக்கத்தை அடுத்து இந்திய மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது