ஓய்வு பெற முடிவு செய்த உசைன் போல்ட்: ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (16:02 IST)
அடுத்த ஒலிம்பிக் போட்டியில் ஓட்டப்பந்தயத்தை கேலரியில் அமர்ந்து பார்ப்பேன் என உலக புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.


 

 
100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலகின் தலைச்சிறந்த வீரராக திகழும் உசைன் போல்ட் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். செக்குடியரசில் நடக்கும் உலக தடகள போட்டியில் பங்கேற்கும் உசைன் போல்ட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
 
லண்டனில் நடக்க இருக்கும் உலக தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து விட்டேன். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை கேலரியில் அமர்ந்து பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார். 
 
இவரது இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவதுவரை ஒலிம்பிக் போட்டியில் இவர் 8 தங்கம் வென்றுள்ளார்.
அடுத்த கட்டுரையில்