உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: இன்று இரண்டு பரபரப்பான போட்டிகள்!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (08:18 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி காலை ஒன்பது முப்பது மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து 1.30 மணிக்கு நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுவரை நடந்த போட்டிகளில் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து இங்கிலாந்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் வங்கதேசம் மற்றும் இந்தியா தலா 2 புள்ளிகளையும் தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாவே தலா ஒரு புள்ளியையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்