இன்று 2வது டெஸ்ட் போட்டி: தொடரை வெல்லுமா தென்னாப்பிரிக்கா?

Webdunia
சனி, 13 ஜனவரி 2018 (07:24 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சமீபத்தில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இன்று இரு நாட்டு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் ஆரம்பமாகிறது

இந்திய நேரப்படி பிற்பகல் ஒன்றரை மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு தயார் செய்யும் வகையில் இரு நாட்டு வீரர்களும் விளையாட்டு மைதானத்தில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டனர்.

மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் தொடர் என்பதால் இந்த போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அதே நேரத்தில் இந்த போட்டியில்  வெற்றி பெற்றுவிட்டால் தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ளதால் தென்னாப்பிரிக்கா அணியும் தீவிரமாக களத்தில் இறங்கும்

இந்திய அணியில் விராத் கோஹ்லி, ரஹானே, தவான், ஜடேஜா, பாண்டியா ஆகிய பேட்ஸ்மேன்களும், அஸ்வின், பும்ரா, புவனேஷ்குமார் ஆகிய பந்துவீச்சாளர்களும் இந்த போட்டியில் ஜொலிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்