ஹாட்ரிக் மெயிடன் ஓவர்கள் வீசி சாதனை : இந்திய வீராங்கனை அசத்தல்..

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (21:22 IST)
டி -20 கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பிரபல பந்து வீச்சாளரான தீப்தி சர்மா மூன்று மெயிடன் ஓவர்கள் வீசி சாதனை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம்  வந்துள்ளனர்.  இந்நிலையில் இந்திய - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 டி- 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
 
இப்போட்டியில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச தீர்மானித்தது. அதனால் இந்திய அணி வீராங்களைகள் முதலில்  பேட்டிங் செய்தனர்.இதில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தனர். கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தனர்.
 
பின்னர், 131 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 29.5 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எனவே இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தீப்தி சர்மா 4 ஓவர்கள் வீசி அதில் 8 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகள் சாய்த்தார். மேலும் 3 ஓவர்கள் மெயிடனாக்கிய இந்திய வீராங்களை என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்