ருத்துராஜின் விலகலுக்குப் பின்னால் சந்தேகம் உள்ளதாக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ருத்துராஜ், களத்தில் தோனியின் ஆலோசனைகளைக் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு, போட்டிகளில் தோற்றதால்தான் அவர் தொடரில் இருந்தே விலக்கப்பட்டுள்ளார் என்றும் அது சம்மந்தமாக சில வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் விதமாக ருத்துராஜ், இன்ஸ்டாகிராமில் தோனியை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். இதைக் காரணமாக காட்டி அணிக்குள் தோனிக்கும், ருத்துராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக ஊகங்கள் பரவ ஆரம்பித்துள்ளன.