சென்னைசூப்பர்கிங்ஸ்அணியின்கேப்டன்தோனிஉள்ளிட்டவீரர்களுக்குநாளைகொரோனாசோதனைமேற்கொள்ளப்பட்டது. இந்தமுடிவு நேற்று வெளியிடப்பட்டது.
தோனி சர்வதேசக் கிரிக்கெட்டில் இனி விளையாடுவது உறுதியாக தெரியாத நிலையில் அவரது ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஐபிஎல் தொடர். செப்டம்பர் மாதம் அமீரகத்தில் நடக்க இருக்கும் தொடரை மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர். இந்நிலையில் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவாகதான் இருக்கும் என சொல்லப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி சென்னை அணி வீரர்கள் அமீரகம் செல்ல இருக்கின்றன.
இதற்காக சி எஸ் கே அணி வீரர்கள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னை வர உள்ளனர். இங்கு 5 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளும் அவர்கள் அதன் பின்னே விமானம் ஏற உள்ளன. இந்நிலையில்
தோனி உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்களுக்கு இன்று சென்னையில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தோனிக்கு கொரோனா இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் , சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து இன்று மாலை தனி விமானத்தில் தோனி சென்னை வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.