கிரிக்கெட் தோன்றி நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகியுள்ள நிலையில் முதல்முறையாக ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. அதாவது முந்தைய போட்டியில் எத்தனை ரன்களில் தோற்றதோ, அதே ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாவே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஜிம்பாவே அணி 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 154 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி அதே ஐந்து விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்து, ஆப்கானிஸ்தான் அணியை 179 ரன்களில் சுருட்டியது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த அதே 154 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவே வெற்றி பெற்று பழிதீர்த்து கொண்டது. கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டியில் இதுபோன்ற ரன்கள் இதுவரை எந்த அணியும் எடுத்து பழிவாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.