தண்ணீர் பஞ்சம்: ரத்து செய்யப்படும் கிரிக்கெட் போட்டிகள்...

சனி, 3 பிப்ரவரி 2018 (17:39 IST)
தென் ஆப்பிரிக்காவின் 2வது பெரிய நகரமான கேப்டவுனில் முழுமையாக தண்ணீர் தீர்ந்துப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நடைபெறுவதாய் இருந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
 
சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் மூன்று ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், பெரும்பாலான நீர் நிலையங்கள் வற்றி விட்டன. மக்களுக்கு தினசரி தேவைக்கு 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
இதனால் இனிவரும் மாதங்களில் தண்ணீர் பஞ்சம் அதிகம் இருப்பதால், இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  
 
இந்தியா – தென் ஆப்ரிக்காவின் முதன் டெஸ்ட் போட்டியின் போது பெய்த மழையால் கொஞ்சம் தண்ணீர் கிடைத்துள்ளது. தற்போது அந்த தண்ணீரும் குறைந்து வருகிறது.
 
இந்த தண்ணீர் பஞ்சம் காரணமாக கிளப் மற்றும் பள்ளிகளுக்கு இடையில் நடக்க இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்