83 படக்குழு உலகக்கோப்பை வென்ற அணிக்கு வழங்கிய தொகை!

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (09:48 IST)
83 படம் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ஓடி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக உலக கோப்பையை கடந்த 1983-ஆம் ஆண்டு வென்ற நிலையில் இந்த நிகழ்வை மையமாக வைத்து படம் ஒன்று உருவாகி உள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த திரைப்படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர் சிங் நடித்துள்ளார். தமிழக வீரர் ஸ்ரீகாந்த் கேரக்டரில் தமிழ் நடிகர் ஜீவா நடித்துள்ளார். நேற்று வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று ஓடி வருகிறது.

இந்நிலையில் இந்த படக்குழு சார்பாக 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அணிக்கு 15 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அணியின் கதாபாத்திரங்களை பயன்படுத்தியதற்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்