அதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடுவதும், சீரான் இடைவெளியில் விக்கெட்களை இழப்பதுமாக இருந்ததால், போட்டி கடைசி வரை எந்த பக்கமும் சாயாமல் விறுவிறுப்பாக சென்றது. இப்படி சென்ற போட்டியில் கடைசி ஒரு பந்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 ரன்கள் தேவைப்பட, ஒரு ரன் மட்டும் சேர்த்து இரண்டாவது ரன் எடுக்கும் போது ரன் அவுட் ஆனார் துருவ் ஜுரெல். இதனால் போட்டி சமனில் முடிய சூப்பர் ஓவர் விளையாடப்பட்டது.
இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 பந்துகளில் 11 ரன்களை எடுத்து 2 விக்கெட்களை இழந்தது. டெல்லி அணி பவுலர் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி, ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை பெரிய ஷாட்களை அடிக்க முடியாமல் கட்டுப்படுத்தினார். இதன் பின்னர் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நான்கு பந்துகளில் அந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மிகச்சிறப்பாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.