ஐபிஎல் 2020: ஏலத்தின் இறுதிப்பட்டியலில் தமிழக வீரர்கள்!!

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (12:31 IST)
ஐபிஎல் 2020  ஏலப்பட்டியலில் 11 தமிழர்கள் வீரர்களின் பெயர் இருப்பது தெரியவந்துள்ளது.
 
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் நாளை கொல்கத்தாவில் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் முன்னணி வீரர்களை ஏலம் எடுக்க ஐபிஎல் அணிகள் தயாராகி வருகின்றன.
 
மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 332 பேர் ஏல பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் இருந்து 73 வீரர்கள் ஏலம் மூலம் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பட்டியலில் 11 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 
 
ஜி.பெரியசாமி, வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர், சித்தார்த், மணிகண்டன், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், பாபா அபராஜித், முகமது, எம்.அபினவ், ஷாருக் கான் ஆகிய தமிழக வீரர்கள் இறுதிக்கட்ட ஏலப்பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்