நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் ருத்துராஜ் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனாலும் எந்தப் பயனும் இல்லை என ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.
தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சி எஸ் கே அணி அதில் ஆறில் தோற்றுள்ளது. இதன் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால்தான் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்ல முடியும். ஆனால் சி எஸ் கே அணியின் தற்போதைய பலத்தை வைத்துப் பார்க்கும் போகும் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று தோன்றுகிறது. தோனியே அடுத்த சீசனுக்கான அணியை உருவாக்குகிறோம்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் பேசும்போது “அடுத்து வரும் ஆறு போட்டிகளையும் வென்று ப்ளே ஆஃப் செல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதை செய்வதற்கானப் ப்ளூ பிரிண்ட்டை RCB அணி எங்களுக்குக் கொடுத்துள்ளது. அதனால் அவர்கள்தான் எங்களுக்கு இப்போது இன்ஸ்பிரேஷன். ஒருவேளை அப்படி நடக்கவில்லை என்றாலும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் எங்களிடம் உள்ளது. இதுபோன்ற நிலையில் இருந்து மீண்டு வந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.