சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சுனில் நரேன் ஓய்வு: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (07:38 IST)
பிரபல மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர் சுனில் நரேன் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 35 வயதான சுனில் நரேன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதை அடுத்த ரசிகர்கள் சோகமாகி உள்ளனர்.  

உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான சுனில் நரேன் டெஸ்ட் போட்டிகளில் 21 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 92 விக்கெட்டுக்கள், மற்றும் டி20 போட்டிகளில் 52 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் உட்பட மற்ற போட்டிகளில் விளையாடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை  கொல்கத்தா அணியில் அவர் மிக அபாரமாக விளையாடினார் என்பதும் அந்த அணியின் பல வெற்றிகளுக்கு அவர் உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுழல் பந்து வீச்சாளர் மட்டுமின்றி அதிரடி பேட்டிங்கிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்