கோஹ்லி, ரஹானே கூட்டணியை உடைத்த பிராட்

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (21:56 IST)
இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது வலுவான நிலைக்கு எடுத்துச் சென்ற கோஹ்லி, ரஹானே கூட்டணியை பிராட் உடைத்தார்.

 
இந்திய - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்து இந்திய அணி தற்போது 4 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்களை கடந்துள்ளது.
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான், ராகுல் ஆரம்பத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கும் முன்பே வெளியேறினார். புஜாரா 14 ரன்களில் வெளியேறினார். 
 
இந்திய அணி 82 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தபோது கேப்டன் கோஹ்லி மற்றும் துனை கேப்டன் ரஹானே ஆகியோர் இணைந்து இந்திய அணியை மீட்டனர். இருவரும் அரைசதம் கடந்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.
 
ரஹானே 81 ரன்கள் குவித்தபோது பிராட் பந்துவீச்சில் வெளியேறினார். ரஹானே, கோஹ்லி கூட்டணியை உடைத்தன் மூலம் இங்கிலாந்து, இந்திய அணியின் வலுவான ரன் குவிப்பை சற்று கட்டுப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்