லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

Mahendran

திங்கள், 7 ஜூலை 2025 (17:21 IST)
தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் வியான் முல்டர் 400 ரன்கள் என்ற லாராவின் சாதனையை நெருங்கியபோது, திடீரென 'டிக்ளேர்' செய்வதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூலை 6 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி அபாரமாக விளையாடி, 5 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
 
இந்த இன்னிங்ஸில் வியான் முல்டர் 367 ரன்கள் அடித்திருந்தார். இன்னும் 33 ரன்கள் எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் என்ற பிரையன் லாராவின் உலக சாதனையை அவர் சமன் செய்திருப்பார். ஆனால், முல்டரே தனது அணியின் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதனால், லாராவின் சாதனை நூலிழையில் முறியடிக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. அவரே கேப்டன் என்பதால் அவர்  தான் அவர் டிக்ளேர் செய்ததாகக் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், ஜிம்பாப்வே அணி தற்போது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வரும் நிலையில், மூன்று விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்