டெல்லி பிரீமியர் லீக் (DPL) போட்டியில், விரேந்தர் சேவாக் மகன் மற்றும் விராட் கோலியின் உறவினர் ஆகியோர் விளையாட போவதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த இரு வீரர்களின் ஏல விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேவாக்கின் மூத்த மகனான ஆர்யாவீர், ஏற்கனவே 19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணியால் ரூ.8 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அதேபோல், விராட் கோலியின் நெருங்கிய உறவினர் பெயரும் ஆச்சரியமாக ஆர்யாவீர் தான் என்பதும், அவர் சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியால் ரூ.1 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேவாக் மகன் ஆர்யாவீர் தனது தந்தையை போலவே அதிரடி தொடக்க ஆட்டக்காரர் என்பதும், கடுமையான போட்டிக்கு மத்தியில் அவர் சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், விராட் கோலியின் உறவினர், டெல்லி ரஞ்சித் டிராபி கேப்டன் ஆயுஷ் பதானி தலைமையிலான சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.