இலங்கையிடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி: மலிங்கா அபார பந்துவீச்சு

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (22:42 IST)
இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணி 233 என்ற எளிய இலக்கை கொடுத்திருந்த நிலையில் அந்த இலக்கை எட்ட முடியாமல் இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இலங்கை அணியின் மலிங்கா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய 27வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ரன்கள் எடுத்தது. மாத்யூஸ் 85 ரன்களும், ஃபெரண்டோ 49 ரன்களும், மெண்டிஸ் 46 ரன்களும், டிசில்வா 29 ரன்களும் எடுத்தனர்
 
233 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரூட் 57 ரன்களும், ஸ்கோக்ஸ் 82 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியால் இலங்கை அணி 6 புள்ளிகளுடன் 5வது இடத்தை பிடித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்