இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரித் பும்ரா. லண்டனில் நடந்து வரும் உலக கோப்பை போட்டிகளில் விளையாடிவரும் பும்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “இங்கிலாந்து பவுலர்களுக்கு சொர்க்கபுரி, பந்து வீசும்போது வேகமாக ஸ்விங் ஆகும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அதெல்லாம் வெறும் மாயையோ என்று சந்தேகமாக இருக்கிறது. இங்கே இருக்கும் மைதானங்கள் எல்லாம் பேட்டிங் செய்வதற்கு சாதகமானவையாக இருக்கின்றன. இதனால் பவுலர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. பவுலர்கள் தங்கள் சொந்த அனுபவத்திலும், வேகத்திலுமே பந்து வீச வேண்டியிருக்கிறது.” என்று பேசியுள்ளார்.
மேலும் அவர் “முதல் போட்டியில் சவுத்தாம்ப்டனில் விளையாடிய மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் பந்து பழசானால் அதில் விளையாடுவதும் சிரமமே. நாம் சொந்த உத்தியில் வீசினாலும் பிட்ச் சப்போர்ட் செய்யாத நிலையில் அது பேட்ஸ்மேனுக்கு சாதகமாக போகும் நிலையிலேயே லண்டனில் மைதானங்கள் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.