இலங்கை அணி இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இதுவரி 5 போட்டிகளில் விளையாடி ஒருப் போட்டியில் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. 2 போட்டிகள் மழைக்காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கிலாந்து அணியோ ஐந்தில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 27 ஆவது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸில் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 10 ஓவர் முடிவில் 48 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் தோற்கும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும்.